மூன்று வாரங்களாகியும் கண் திறக்காத இளவரசி!!

மூன்று வாரங்களாகியும் கண் திறக்காத இளவரசி!!

Published on

மூன்று வாரங்கள் ஆகியும் தாய்லாந்து இளவரசிக்கு சுயநினைவு திரும்பவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

தாய்லாந்து நாட்டின் மன்னர் மஹா வஜிரலோங்கோர்னின் மூத்த மகள் இளவரசி பஜ்ரகித்தியபா.  44 வயதான இவர் கடந்த மாதம் 15-ந் தேதி தலைநகர் பாங்காக்கில் அவரது நாய்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது திடீரென சரிந்து விழுந்தார்.  இந்நிலையில் உடனடியாக அவர் பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.  பஜ்ரகித்தியபா இதய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருவத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com