துருக்கியில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்...அதிகரிக்கக்கூடும் உயிரிழப்புகள்!

துருக்கியில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்...அதிகரிக்கக்கூடும் உயிரிழப்புகள்!

துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்த விழுந்ததில் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

துருக்கி - சிரியா எல்லை அருகே இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நூர்தாகி நகரில் இருந்து 23 கிலோ மீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 3 மணிக்கு உணரப்பட்ட நிலநடுக்கம் 7 புள்ளி 9 ஆக பதிவாகி இருந்தது. இதையடுத்து மீண்டும் 11 நிமிடங்களுக்குப் பிறகு, அடுத்தடுத்து 5 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிக்க : உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறிய தமிழ்மகன் உசேன்... பதில் கடிதம் அனுப்பிய ஓபிஎஸ்...!

இந்த நிலநடுக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல் உள்பட அண்டை நாடுகளில் உணரப்பட்டுள்ளது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 50-க்கும் மேற்பட்டோரும், சிரியாவில் 40-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

துருக்கியின் கஹ்ராமன்மாராஸ் பகுதியில் நிலநடுக்கம் காரணமாக இயற்கை எரிவாயு குழாயில் வெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பயங்கர வெடி விபத்தால் அப்பகுதியில் பல அடி தூரத்திற்கு தீப்பிழம்புகள் எழுந்தன.