பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ரயில்வே ட்ராலியில் சென்று வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள்...மக்களிடம் பாராட்டைப் பெற்ற தன்னார்வாளர்கள்

பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ரயில்வே ட்ராலியில் சென்று வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள்...மக்களிடம் பாராட்டைப் பெற்ற தன்னார்வாளர்கள்

பிலிப்பைன்சில் ரயில்வே ட்ராலி மூலம் ஊரகப் பகுதிகளுக்குச் சென்று குழந்தைகளுக்கு வகுப்பு எடுப்பது பாராட்டைப் பெற்றுள்ளது.

ஒமிக்ரான் பரவலால் பிலிப்பைன்சில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படாமல் இருக்க, சில ஆசிரியர்கள் இணைந்து நடமாடும் வகுப்பறைத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

அதிக ரயில் சேவை இல்லாத வழித்தடங்களில் ஒரு ட்ராலியில் கரும்பலகை, நூலகம், கணினி எனத் தேவையான பொருட்களுடன் சென்று அங்குள்ள குழந்தைகளை அழைத்து பாடம் நடத்துகின்றனர்.

ஏழ்மைப் பின்னணியில் இருந்து வந்ததால், தன்னார்வத்துடன் இதனைத் செய்வதாக அந்த ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.