சீனா, ஈரானில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்... 3 பேர் பலி.. அச்சத்தில் மக்கள்!!

இன்று அதிகாலை சீனா மற்றும் ஈரானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சீனா, ஈரானில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்... 3 பேர் பலி.. அச்சத்தில் மக்கள்!!

சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் அதிகாலை 1.30 மணி-க்கு 6.1 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும்.. 1500 பேர் மாயமாகிவிட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது. இதை தொடர்ந்து, ஈரானில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 8 பேர் படும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.. மேலும் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

இதை தொடர்ந்து, சீனாவின் ஜின் ஜியாங் பகுதியில் இன்று அதிகாலை 3:29 மணியளவில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு சாலையில் தஞ்சம் அடைந்தனர். அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.