கொழும்பு சென்றடைந்த ஐராவத் போர்க்கப்பல்!

இந்திய கடற்படையின் 'ஐ.என். எஸ். ஐராவத்' போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்தது.

இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐ.என். எஸ். ஐராவத்' போர்க்கப்பல், உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்தது. இலங்கை கடற்படையினர் கப்பலுக்கு வரவேற்பளித்துள்ளனர்.

மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில், ஐராவத் கப்பல் கேப்டன் ரிந்து பாபு, மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேராவுக்கும் இடையே அரசு முறை சந்திப்பு நடைபெற்றது.

இதையடுத்து கப்பலானது இலங்கையில் நங்கூரமிடப்பட்டிருக்கும் காலத்தில், கூட்டு பயிற்சியில் ஈடுபடவுள்ளதாவும், பயிற்சிகள் நிறைவடைந்த பின்னர் வெள்ளிக்கிழமை மீண்டும் இந்தியா நோக்கி பயணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.