அமெரிக்கா: துப்பாக்கிக் கட்டுப்பாட்டு மசோதாவுக்கு பெருகும் ஆதரவு!!

அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என பெரும்பாலான ஜனநாயகக் கட்சித் தலைவா்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

அமெரிக்கா:  துப்பாக்கிக் கட்டுப்பாட்டு மசோதாவுக்கு பெருகும் ஆதரவு!!

அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான சட்ட மசோதாவை ஆளும் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் சில குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் ஆதரவுடன் செனட் சபையில் நிறைவேற்றினா்.

இதையடுத்து, இந்த வார இறுதியில் மசோதா இறுதிக்கட்ட வாக்கெடுப்புக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம், 29 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் ஆயுதச் சட்டத் தீா்திருத்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,  துப்பாக்கி வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று ஒரு தரப்பினா் கோரி வருகின்றனா். இதற்கு பெரும்பாலான ஜனநாயகக் கட்சித் தலைவா்கள் ஆதரவு அளித்துள்ளனர்.