மன்னிப்புக் கேட்ட அமெரிக்கா... எதற்காக தெரியுமா..?

ஆப்கானிஸ்தானின் காபூலில் ட்ரோன் தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

மன்னிப்புக் கேட்ட அமெரிக்கா... எதற்காக தெரியுமா..?

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறியபோது, காபூல் விமான நிலையத்தை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. அதில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 175 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா ட்ரோன் விமான தாக்குதலில், ஒரே குடும்பத்தை சேர்ந்த அப்பாவி மக்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.  
இறந்தவர்களில் ஆறு குழந்தைகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், ட்ரோன் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகள் கொல்லப்படவில்லை என்றும், இந்த மோசமான தவறில் இருந்து கற்றுக்கொள்ள முயற்சிப்பதாகவும், அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.