வரலாறு காணாத அளவில் அதிகரித்த உயிரிழப்பு... காரணம் என்ன?!!

வரலாறு காணாத அளவில் அதிகரித்த உயிரிழப்பு... காரணம் என்ன?!!

2022-ம் ஆண்டில் பாகிஸ்தானில் தீவிரவாதச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது. 

சமீபத்திய ஒரு அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில், பாகிஸ்தானில் பயங்கரவாத சம்பவங்களில் 643 பேர் இறந்துள்ளனர்.  இது முந்தைய ஆண்டில் 292 இறப்புகளை விட 120 சதவீதம் அதிகம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனத்தின் உலகளாவிய பயங்கரவாத குறியீட்டு அறிக்கையில் இந்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  ஆப்கானிஸ்தானில் தீவிரவாத சம்பவங்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் 2007 முதல் 2022 வரை 14,920 பேர் தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர்.  இவற்றுள் பாகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியிலேயே தீவிரவாதச் சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளன.  பாகிஸ்தானில் நடந்த மொத்த பயங்கரவாத சம்பவங்களில் 63 சதவீதம் ஆப்கானிஸ்தானை ஒட்டிய பகுதிகளில் நடந்துள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.  அதாவது பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதல்களின் மொத்த இறப்புகளில் 74 சதவீதம் இங்குதான் நிகழ்ந்துள்ளது. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:  விமானப்படையின் உதவி செயலாளராக பதவியேற்ற முதல் இந்திய-அமெரிக்கர்...!!!