எத்தகைய போர்ச் சூழலையும் சமாளிக்கும் வகையில் தயாராகும் வீரர்கள்... இலங்கை ராணுவத்தின் வருடாந்திர போர்ப் பயிற்சி...

இலங்கை கிழக்கு மாகாணத்தில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டனர்.

எத்தகைய போர்ச் சூழலையும் சமாளிக்கும் வகையில் தயாராகும் வீரர்கள்... இலங்கை ராணுவத்தின் வருடாந்திர போர்ப் பயிற்சி...

இலங்கை ராணுவத்தினர் நீர்க்காகம் என்ற பெயரில் ஆண்டுதோறும் போர்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை பாதுகாப்பு படையினரால் தொடர்ச்சியாக 11வது ஆண்டாக முன்னெடுக்கப்பட்டும் இந்த பயிற்சியில் அந்நாட்டு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பங்கேற்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் போலவே இந்தாண்டும் வெளிநாட்டுத் துருப்புகளின்றி போர் பயிற்சி நடைபெற்று வருகிறது.

29ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பயிற்சியில் எத்தகைய போர்ச் சூழலையும் சமாளிக்கும் வகையில் வீரர்கள் தங்களை தயார்ப்படுத்திக் கொள்கின்றனர். அந்த வகையில் இன்று விமானத்தில் இருந்து தாக்குதலை எதிர்கொள்ளும் வகையிலான போர்ப்பயிற்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தரை மற்றும் விமானம் சார்ந்த போர் உத்திகளை கையாள்வதற்கான பயிற்சிகள் நடைபெறும் என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.