ஹிஜாப்பை தடை செய்து உள்நாட்டு போரை உருவாக்க திட்டமிட்டுள்ளீர்களா? - அதிபர் வேட்பாளரை சாடிய பிரான்ஸ் அதிபர்

ஹிஜாப்பை தடை செய்து உள்நாட்டு போரை உருவாக்க திட்டமிட்டுள்ளீர்களா? - அதிபர் வேட்பாளரை சாடிய பிரான்ஸ் அதிபர்

நாட்டில் ஹிஜாப்பை தடை செய்து, உள்நாட்டு போரை உருவாக்க திட்டமிட்டுள்ளீர்களா என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், வலதுசாரி அதிபர் வேட்பாளர் பென் லீயை சாடியுள்ளார்.

பிரான்ஸில் அதிபர் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு அண்மையில் நடந்து முடிந்தது. இதனைத்தொடர்ந்து 2ம் கட்ட தேர்தலானது வருகிற 24ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் மற்றும் தீவிர வலது சாரி வேட்பாளர் மரின் லீ பென் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ரஷ்யாவுடன் நெருங்கிய நட்பு கொண்ட மரின் லீ பென் அதிபராக பொறுப்பேற்றால், ரஷ்யாவுக்கு எதிரான மேற்கத்திய முயற்சிகளை குறைக்க கூடும் என சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் தேர்தலுக்கு முந்தைய விவாத நிகழ்ச்சியில் பேசிய பென் லீ, தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஹிஜாப்பிற்கு தடை விதிப்பேன் என தனது சர்ச்சைக்குரிய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இதற்கு எதிராக பேசிய மெக்ரான், ஹிஜாப் தடை மூலம் உள்நாட்டு போரை உருவாக்கப் போகிறீர்கள் என எச்சரித்தார்.