உலகிற்கே அச்சுறுத்தலாக மாறும் பனிப்பாறை விரிசல்கள்!

அண்டார்டிகா த்வைட்ஸ் பனிப்பாறைகள் உருகி வருவதால், கடல் மட்டம் அதிகரித்து பெரும் ஆபத்தை உண்டாக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

உலகிற்கே அச்சுறுத்தலாக மாறும் பனிப்பாறை விரிசல்கள்!

அண்டார்டிகா பகுதியில் ஏற்பட்டுள்ள பனிப்பாறை விரிசல்களை செயற்கை கோள்கள் மூலம் படம்பிடித்து காட்டப்பட்டு வருகின்றன. இதன் மூலம் உலகம் பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும் என தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த பனிப்பாறையானது அண்டார்டிகாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. த்வைட்ஸ் பனிப்பாறை மிக வேகமாக உருகி வருவதாக தகவல் தெரிவித்து வருகின்றனர்.இதன் காரணமாக உலகளாவிய கடல் மட்டம் திடீரென அதிகரிக்க கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதனால் பல பகுதிகள் நீரில் மூழ்கி மக்கள் இடம் பெயர நேரிட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தனர்.

கடல்கள் வெப்பமயமாதலின் விளைவுகளாக த்வைட்ஸ்  ஈஸ்டர்ன் ஐஸ் ஷெல்ஃப் பனிப்பாறைகள் இணைப்பதற்கான புள்ளியாக செயல்படுவதாகவும் தெரியப்படுத்தினர்.இதற்கிடையே செயற்க்கை கோள்கள் மூலம் வெளியிட்ட படங்களில் த்வைட்ஸ் பகுதியில் பெரிய அளவில் விரிசல்களை ஏற்படுத்தி வருவது பதிவாகியுள்ளது.

இந்த மிதக்கும் பனிகட்டிகள் உடைந்து வருவதால் கடல் மட்டம் 25 சதவீதம் உயரும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.பனிப்பாறை நிபுணர் பேராசிரியர் டெட் ஸ்கம்போஸ், இதை பற்றி கூறியிருப்பதாவது பனிப்பாறையின் நிலையில் வியத்தகு மாற்றங்கள் நிகழப் போவதாகவும், த்வைட்ஸ் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகிறதாகவும் தெரிவித்தார்.

பனிப்பாறைகள் உருகி வருவதால் அதன் பெரும்பகுதி உடையும் அபாயத்தில் உள்ளதாக தகவல் கூறியுள்ளார்.விரிசல் அதிகரித்து உடைந்து போனால் அவை த்வைட்ஸ் கிழக்கு பகுதியில் மூன்றில் ஒரு பகுதியை இன்னும் வேகமாக உருகச் செய்யும், இந்த நிகழ்வினால் பனிப்பாறை உருகும் வேகம் மும்மடங்கு அதிகரிக்கும் என எச்சரித்து வருகின்றனர்.