ஆசிய கோப்பையால் ஏற்பட்ட வன்முறை!!!

ஆசிய கோப்பையால் ஏற்பட்ட வன்முறை!!!
Published on
Updated on
1 min read

இனவெறியாளர்களை எதிர்த்து சகோதரத்துவத்துடன் ஒன்றிணைவோம் எனக்கூறி இங்கிலாந்தின் லெய்செஸ்டர் நகரில் இந்து-முஸ்லீம் சமூகத்தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆசியகோப்பை:

ஆகஸ்ட் 28ம் தேதி லெய்செஸ்டர் நகரில் நடைபெற்ற ஆசியக்கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் போட்டியின்போது ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து வெறுப்புணர்வு நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

கூட்டறிக்கை:

இந்நிலையில், லெய்செஸ்டர் நகரில் சகோதர சகோதரிகளாக அரை நூற்றாண்டுக்கும் மேல் அற்புத உறவோடு வாழ்ந்து வருவதாக அந்நகர இந்து-முஸ்லீம் சமூகத்தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

பிரிவினையை ஏற்படுத்தும் எந்த தீவிரவாத சித்தாந்ததுக்கும் இங்கு இடமில்லை எனவும் ஒன்றாகவே இந்நகரத்துக்கு வந்த நாங்கள் ஒன்றாகவே பல்வேறு இடர்களை எதிர்கொண்டதாகவும் அதில் தெரிவித்துள்ளனர்.

இந்நகரத்தை பன்முகத்தன்மை மற்றும் சமூக ஒற்றுமையின் கலங்கரை விளக்கமாக ஒன்று சேர்ந்தே உருவாக்கினோம் எனவும் இந்த வன்முறையால் இதயம் நொறுங்கும் வேதனையை அனுபவித்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கோரிக்கை:

மசூதிகள் மற்றும் கோவில்களின் புனிதங்களை இருமதத்தினரும் கண்ணியத்துடன் மதிக்க வேண்டும் எனவும் கூட்டறிக்கையில்  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com