ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு - 2 பேர் உயிரிழப்பு

லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் நடைபெற்ற போராட்டத்தின் போது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியாயினர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு - 2 பேர் உயிரிழப்பு

லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் நடைபெற்ற போராட்டத்தின் போது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியாயினர்.

லெபனானில் பொருளாதார சிக்கல் , மின் வெட்டு ஆகியவை மக்களை போராட்ட களத்துக்கு இழுத்து சென்றுள்ளது. அங்குள்ள முக்கிய நகரங்களில் பொது மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அவர்களை அடக்க முடியாமல் போலீசாரும் ராணுவத்தினரும் திணறி வருகின்றனர்.

பெய்ரூட்டில்  போராட்டத்தின்போது கட்டிடம் ஒன்றின் மீது நின்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 2 பேர் பலியாயினர் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நீடிக்கிறது. இதனால் போலீசார் கூடுதலாக பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர