அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீர் தீ விபத்து-40 பேர் உயிரிழப்பு

தைவான் நாட்டில் நிகழ்ந்த பயங்கர தீவிபத்தில் 40 பேர் பலியாயினர்.

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீர்  தீ விபத்து-40 பேர் உயிரிழப்பு

தைவான் நாட்டில் நிகழ்ந்த பயங்கர தீவிபத்தில் 40 பேர் பலியாயினர். கவோஷியாங் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு தீயணைப்பு துறையினர் விரைவதற்கு முன்னர் தீ மற்ற கட்டிடங்களுக்கும் வேகமாக பரவியது.

இதனால் குடியிருப்பில் இருந்தவர்கள் உயிர் பிழைக்க அங்கும் இங்கும் சிதறி ஓடினார். ஆனால் இந்த தீ விபத்தில் பலரால் தப்பிக்க முடியவில்லை . இந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். ஏரளாமானோர்  காயமடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.