ஹால்ஃப் மூன் பேயில் நடந்த தாக்குதல்...போலீஸ் விசாரணை....

ஹால்ஃப் மூன் பேயில் நடந்த தாக்குதல்...போலீஸ் விசாரணை....

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் ஹால்ஃப் மூன் பே பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சான் பிரான்சிஸ்கோ அருகே உள்ள ஹால்ஃப் மூன் பே பகுதியில் மர்ம நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.  அண்மையில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்த நிலையில், அதே சுற்றுவட்டாரத்தில் மீண்டும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், சந்தேகத்திற்கு இடமானவர்களை கைது செய்து விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:   நண்பனின் இறப்பிற்கு நடிகர் சாந்தனுவின் உருக்கமான பதிவு....