இந்த ஹாட் சீட்டுக்கு 28 மில்லியன் டாலரா? அள்ளிக்கொடுத்த சகோதரர்கள்...

ஜெப் பெசோஸ் மற்றும் அவரது சகோதரருடன் விண்வெளி செல்வதற்கான இருக்கையை ஒருவர் 28 மில்லியன் டாலருக்கு ஏலம் எடுத்தார்.  

இந்த ஹாட் சீட்டுக்கு 28 மில்லியன் டாலரா?  அள்ளிக்கொடுத்த சகோதரர்கள்...

ஜெப் பெசோஸ் மற்றும் அவரது சகோதரருடன் விண்வெளி செல்வதற்கான இருக்கையை ஒருவர் 28 மில்லியன் டாலருக்கு ஏலம் எடுத்தார்.  

உலக பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ‌ஜெப் பெசோஸ், புளூ ஆரிஜின் என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் ஒன்றை கடந்த 2000-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார். மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்வதை நோக்கமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் தனது முதல் விண்வெளிப் பயணமாக அடுத்த மாதம்  20-ந் தேதி நியூ ஷெப்பர்ட் பூஸ்டர் விண் கலத்தை விண்ணில் செலுத்துகிறது.

இதில் ஜெப் பெசோஸ் தனது சகோதரர் மார்க்குடன் விண்வெளிக்கு பயணிக்கிறார். இந்த பயணத்தின்போது ஜெப் பெசோஸ் மற்றும் அவரது சகோதரருடன் மேலும் ஒருவர் இணையலாம் என்பதால் அந்த இருக்கையை புளூ ஆரிஜின் நிறுவனம் ஏலம் விட்டது. அதன்படி ஜெப் பெசோஸ் மற்றும் அவரது சகோதரருடன் விண்வெளி செல்வதற்கான இருக்கையை ஒருவர் 28 மில்லியன் டாலருக்கு ஏலம் கேட்டார். அதற்கு மேல் யாரும் ஏலம் கேட்காத நிலையில் அந்த இருக்கையை அவருக்கு ஒதுக்கி புளூ ஆரிஜின் நிறுவனம் ஏலத்தை முடித்து வைத்தது.