
ஆப்கானிஸ்தானின் கந்தாகர் மாகாணத்தில் உள்ள மசூதியில் இன்று மீண்டும் குண்டு வெடித்ததில் 10 க்கும் மேற்பட்டுடோர் பலியாகினர்.
அங்குள்ள இமாம் பர்ஹா மசூதியில் தொழுகைக்காக மக்கள் கூடி இருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இதில் ஏராளமானோர் படுகாயமுற்றதாகவும், இஸ்லாமியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் எனவும் கூறப்படுகிறது.
கடந்த 8ம் தேதி, ஒரு மசூதியில் இதேபோல் நடத்தப்பட்ட தாக்குதலில் 100 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.