கச்சத்தீவு...! புத்தர் சிலை அகற்றம்...!!

கச்சத்தீவு...! புத்தர் சிலை அகற்றம்...!!

இலங்கை கடற்படையால் கச்சத்தீவில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 24ஆம் தேதி கச்சத்தீவில் புத்தர் சிலை அமைக்கப்பட்டு இருப்பதாக செய்தி பரவியது. இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்களும் உலகின் பல்வேறு பகுதியில் வாழ்ந்து வரும் தமிழர்களும் கச்சத்தீவில் புத்தர் சிலை அமைக்கப்பட்டதுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இரு நாட்டைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று கச்சத்தீவில் அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டுவிட்டதாக இலங்கை கிறித்துவர்களுக்கான ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

சிலை அகற்றப்பட்ட விடயத்தை இலங்கை கடற்படையின் உயர் அதிகாரிகள் ஆயர் இல்லத்துக்கு அறிவித்துள்ளதாக தெரிகிறது. அங்கு அமைக்கபட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு கச்சதீவுக்கு வெளியே  கொண்டு செல்லப்பட்டு விட்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், இப்பிரச்சினையை ''அமைதியான முறையில் தீர்த்து வைக்க ஒத்துழைத்த இலங்கை கடற்படை உயர் அதிகாரிகளுக்கும் மற்றும் கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட குரல் கொடுத்த அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்'' என ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க:சூடானில் இருந்து மீட்கப்பட்ட 5 பேர்... சென்னை வந்தனர்...!!