ஒட்டகங்களுக்கு அழகு போட்டி !! ஆபரேஷன் செய்து மாட்டிக்கொண்ட உரிமையாளர்கள்!!

சவுதி அரேபியாவில் ஒட்டகத்திற்கு என தனியாக நடத்தப்பட்டு வரும் அழகு போட்டியில் , அழகாக இருக்கும் ஒட்டகத்தை தேர்வு செய்து அதற்கான பரிசுகள் வழங்கப்படுகிறது.

ஒட்டகங்களுக்கு அழகு போட்டி !! ஆபரேஷன் செய்து மாட்டிக்கொண்ட உரிமையாளர்கள்!!

உள்ளூர் அழகி முதல் உலகி அழகி வரையிலான அழகு போட்டிகள் கேள்விப்பட்டிருப்போம்.இது என்ன வெடிக்கையான செயல் என்பதை போல உள்ளது இந்த ஒட்டக அழகு போட்டி.மேலும் இவை சவுதி அரேபியாவில் மட்டுமே நடைபெறுகிறது என தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.

இந்த நாட்டின் வடகிழக்கு பகுதியான ரியாத் பாலைவனத்தில் ஆண்டுதோறும் ஒட்டகத்திருவிழா நடைபெறுவதாகவும்,அழகான ஒட்டகங்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள முடியும் எனவும் தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்த போட்டியில் பங்கேற்கும் ஒட்டகங்கள் அதன் உண்மை தோற்றத்தோடு இருக்க வேண்டும் என்பது விதிமுறையில் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது.ஆனால் விதிமுறைகளை மீறி போடெக்ஸ் என்ற ஊசியை ஒட்டகத்திற்கு செலுத்தி, உதடு மற்றும் கூம்பு பகுதியை அறுவை சிகிச்சை மூலம் ஓட்டகங்களை அழகுபடுத்தி, அழகுசாதன பொருட்களை வைத்தும் மெருகூட்டி மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்து வந்தன.

இந்த ஆண்டின் ஒட்டக அழகு போட்டியில் இதுபோன்ற முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்தது. இதில் 43 ஒட்டகங்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டு போட்டியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இத தொடர்ந்து வரும் காலங்களில் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால் உரிமையாளருக்கும் கடும் அபராதம் எனவும் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.