கைத்துப்பாக்கியை எடுத்துச் செல்வது தனிநபர் உரிமை.. துப்பாக்கி தொடர்பான தீர்ப்பால் ஏமாற்றம் - வெள்ளை மாளிகை

தற்காப்புக்காக பொது இடங்களில் கைத்துப்பாக்கியை எடுத்துச் செல்வது தனிநபர் உரிமை என்ற அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

கைத்துப்பாக்கியை எடுத்துச் செல்வது தனிநபர் உரிமை.. துப்பாக்கி தொடர்பான தீர்ப்பால் ஏமாற்றம் - வெள்ளை மாளிகை

அமெரிக்காவில் அண்மைக் காலமாக வெகுஜன துப்பாக்கிச்சூடு என்பது வாடிக்கையான நிகழ்வாக மாறி விட்டது. இதனால் துப்பாக்கி வைத்திருப்பதற்கான 1913-ம் ஆண்டு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதிபர் ஜோ பைடனும் இந்த கருத்தை வலியுறுத்தினார்.

ஆனால், இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொது இடங்களில் தற்காப்புக்காக கைத்துப்பாக்கி வைத்திருப்பது அரசியல் சாசனம் வழங்கிய உரிமை என்று தீர்ப்பளித்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிபர் பைடனுக்கு மிகவும் ஏமாற்றம் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.