கேனரி தீவில் தொடர்ச்சியான நிலநடுக்கம் காரணமாக எரிமலை வெடிக்க வாய்ப்பு...

ஸ்பெயினில் உள்ள கேனரி தீவில் தொடர்ச்சியான நிலநடுக்கம் காரணமாக எரிமலை வெடிக்க வாய்ப்புள்ளது.

கேனரி தீவில் தொடர்ச்சியான நிலநடுக்கம் காரணமாக எரிமலை வெடிக்க வாய்ப்பு...

ஸ்பெயினின் லா பால்மாவில் சுமார் 85ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கேனரி தீவுகள் எட்டு தீவுகளால் ஆன ஒரு எரிமலைத் தீவுக்கூட்டமாகும். கடந்த சில நாட்களாக லா பால்மா தீவைச் சுற்றி 4,200 க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. மேலும், இந்த பகுதியில் வரும் நாட்களில் நிலநடுக்கம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் இது எரிமலையாக உருவாக அதிக வாய்ப்புள்ளது என்று அந்நாட்டு தேசிய புவியியல் ஆய்வு மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறைந்த காலத்தில் அதிகமான நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ள காரணத்தால் அங்கு எரிமலை வெடிக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இதுவரை ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் காரணமாக கும்ப்ரே விஜா எரிமலையில் தீப்பிழம்புகள் ஏற்பட்டு லார்வா குழம்பு வெளிவரத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.