"சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் பேரன்பில் நனைந்தேன்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

"சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் பேரன்பில் நனைந்தேன்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

"சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் பேரன்பில் நனைந்தேன்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனவரியில் சென்னையில் நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர்களின் மாநாட்டிற்கு பன்னாட்டு கம்பனிகளை சேர்ந்த தொழிலதிபர்களக்கு அழைப்பு விடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சென்றுள்ளார். இதற்காக நேற்று சிங்கப்பூர் சென்ற முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மகிழ்ந்த முதலமைச்சர் முக.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் சிங்கப்பூர் தமிழர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக செய்தி பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவா் தனது ட்விட்டா் பதிவில், சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் பேரன்பில் நனைந்தேன், நெஞ்சம் நெகிழ்ந்தேன் எனவும், தமிழும், தமிழ் பண்பாடும் காத்து வாழும் சிங்கப்பூா் வாழ் தமிழா்களோடு அன்னை நிலமான தமிழ்நாட்டின் அன்போடு உரையாற்றியதாக குறிப்பிட்டுள்ளாா். மேலும் உலகெங்கும் வாழும் தமிழர்களின் நலனையும், உரிமைகளையும் காக்க திமுகவும், தமிழ்நாடு அரசும் தொடர்ந்து செயல்படும் என்ற உறுதியை ஆழப்பதிந்தேன் எனவும் குறிப்பிட்டுள்ளாா். 

இதையும் படிக்க:"வன திருத்த மசோதா, மத்திய அரசின் அறிவிப்புக்கு இடைக்கால தடை" உயர்நீதிமன்றம்!