குழந்தைகளுக்கு ஒமிக்ரான் பூஸ்டர் டோஸ் அவசியம்... உலக சுகாதார அமைப்பு மருத்துவர் தகவல்...

குழந்தைகளுக்கான ஒமிக்ரான் பூஸ்டர் டோஸ் அவசியம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு ஒமிக்ரான் பூஸ்டர் டோஸ் அவசியம்... உலக சுகாதார அமைப்பு மருத்துவர் தகவல்...
Published on
Updated on
1 min read

ஒமிக்ரான் தாக்கத்தின் அளவு மாறுபட்டாலும் பாதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உலக நாடுகளின் சுகாதார துறைக்கு அதிக சவால்கள் ஏற்படுகின்றன. இதனால் எதிர்காலத்தில் ஒமிக்ரான் தாக்கத்தால் உண்டாகும் மரணத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்காசிய தலைவர் பூனம் கேட்ராபால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தற்போது தீவிர ஆராய்ச்சி நடைபெற்று வருவதாகவும், தற்போது உள்ள தடுப்பு மருந்து ஒமிக்ரான் தாக்கத்தை சமாளிக்க ஏற்றதா என்று ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

தடுப்பு மருந்துகள் ஓரளவுக்குத் தான் பாதுகாப்பு அளிக்க முடியுமே தவிர முழுவதுமாக வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காக்க முடியாது என விளக்கமளித்துள்ள உலக சுகாதார அமைப்பு, ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகள் மற்றும் சத்து பற்றாக்குறை கொண்ட இளைஞர்கள் ஆகியோருக்கு மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், ஒமிக்ரான் குறித்த மேலும் பல தகவல்கள் கிடைத்ததும் அதிகாரப் பூர்வமாக பல தகவல்களை வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com