தனிப்பட்ட ஆதாயத்திற்காக சீனா, ரஷ்யா நாடுகள் தலிபான்களை ஆதரிக்கின்றன: ஜோ பைடன் விமர்சனம்...

தனிப்பட்ட ஆதாயத்திற்காக சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தாலிபான்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள விரும்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார். 

தனிப்பட்ட  ஆதாயத்திற்காக சீனா, ரஷ்யா நாடுகள் தலிபான்களை ஆதரிக்கின்றன: ஜோ பைடன் விமர்சனம்...

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையிலான புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளது.  
இந்நிலையில், இந்த புதிய அரசை அங்கீகரிப்பதில் அமெரிக்கா அவசரம் காட்டாது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அங்கு நிலவும் நடவடிக்கைகள் உற்று கவனிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே ஆப்கானிஸ்தானுக்கு சீனா நிதி உதவி வழங்குவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீனாவுக்கும் தாலிபான்க ளுக்கும் இடையே பிரச்னை இருப்பதாக தெரிவித்தார். எனவே அதனை சுமூகமாக தீர்த்துக்கொள்ளும் வகையில் அவை தாலிபான் தலைமையிலான ஆப்கானிஸ் தானுடன் தொடர்பு வைத்துக்கொள்ள அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதேபோல் பாகிஸ்தான், ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளும்  தாலிபான்களுடனான உறவை தக்கவைத்துக்கொள்ள ஏதாவது ஒரு வகையில் முயற்சிக்க கூடும் எனவும், அதனை பொறுத்திருந்து கவனிப்போம் எனவும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட ஆதாயத்திற்காக உலக  நாடுகள் ஆப்கானிஸ்தானை அங்கீகரிக்க தீவிரம் காட்ட வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார்.