சீனா ஒருபோதும் மேலாதிக்கத்தை விரும்பியதில்லை - ஜி ஜின்பிங்

சீனா ஒருபோதும் மேலாதிக்கத்தை விரும்பியதில்லை என ஐநா விவாத கூட்டத்தில் அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சீனா ஒருபோதும் மேலாதிக்கத்தை விரும்பியதில்லை - ஜி ஜின்பிங்

சீனா ஒருபோதும் மேலாதிக்கத்தை விரும்பியதில்லை என அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஐநா பொதுசபை விவாத கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உரையாற்றிய பின் சீன அதிபர் ஜி ஜின்பிங் காணொலி வாயிலாக உரையாற்றினார்.

அப்போது பேசிய ஜி ஜின்பிங், உலக நாடுகளுக்கிடையேயான வேறுபாடுகள் மற்றும் பிரச்சனைகள் தவிர்க்க முடியாதவை என கூறினார்.

அவற்றை சமத்துவம், பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பின் மூலம் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ஒரு நாட்டின் வெற்றி என்பது மற்றொரு நாட்டின் தோல்வி என்று அர்த்தமல்ல என குறிப்பிட்ட அவர், சீனா ஒருபோதும் மேலாதிக்கத்தை விரும்பியதில்லை எனவும் கூறியுள்ளார்.