100க்கும் மேற்பட்ட ஏவுகணை தளங்களை உருவாக்கியுள்ளா சீனா...

சீனாவின் அணு ஆயுத குவிப்பு குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.
100க்கும் மேற்பட்ட ஏவுகணை தளங்களை உருவாக்கியுள்ளா சீனா...
Published on: 
Updated on: 
1 min read
சீனாவின் கன்சு மாகாணத்தில் 100 க்கும் மேற்பட்ட புதிய ஏவுகணை தளங்கள் உருவாக்கி வருவது புதிய செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் அணு ஆயுத பலத்தை சமாளிக்கும் வகையில் சீனா தனது வலிமையை அதிகரித்து வருவதையே இது காட்டுவதாக உள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து வெள்ளை மாளிகையின் செய்தியாளர்களிடையே பேசிய அமெரிக்கா வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், சீனாவின் அணு ஆயுத குவிப்பு குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளதாகவும் அணு ஆயுத கட்டமைப்பை பலப்படுத்துவதில்,எதிர்பார்த்ததை விட சீனா மிக விரைவாக முன்னேறி வருவதாகவும் கூறினார். 
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com