இங்கிலாந்தில் ”காதல் வளர்த்தேன்”பிஜியம் போட்ட கல்லூரி மாணவர்...ஆக்‌ஷன் எடுத்த ஆக்ஸ்போர்ட்

இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்த இந்திய வம்சவாளி மாணவர் ஒருவர், சக மாணவிக்கு 100 பக்கத்தில் மிரட்டல் கடிதம் அனுப்பிய காரணத்திற்காக பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இங்கிலாந்தில் ”காதல் வளர்த்தேன்”பிஜியம் போட்ட கல்லூரி மாணவர்...ஆக்‌ஷன் எடுத்த ஆக்ஸ்போர்ட்

ஆக்ஸ்போர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக் கழகத்தில் இந்திய வம்சாவளி மாணவரான ஷகில் படித்து வந்தார். அதே பல்கலைக் கழகத்தில் நர்சிங் படித்து வந்த மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது காதலை வெறித்தனமாக வெளிப்படுத்தும் விதமாக, ஷகில் 100 பக்கத்தில் தன்னை தொடர்பில் இருக்குமாரும் மிரட்டல் கடிதம் அனுப்பியதாக புகார் எழுந்தது.

அந்த கடிதத்தில் மாணவியை தன் மனைவியாக்கப் போவதாகவும், தன்னுடைய குழந்தைகளை உன் மூலம் பிறக்க வைக்கப்போகிறேன் என வாய்ஸ் மெசேஜ்களையும் ஷகில் அந்த மாணவிக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. 

ஆனால் காதலை அந்த மாணவி ஏற்க மறுத்ததாக தெரிகிறது. ஷகிலுடன்,  பேச விருப்பமில்லை என கல்லூரி மாணவி கூறியும் ஷகில் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் பயந்த அந்த மாணவி இதுகுறித்து பல்கலைக் கழகத்திலும் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. முதலில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் தான் அந்த மாணவியை பின் தொடர்ந்து உண்மைதான் என்றும், ஆனால் மிரட்டவில்லை ஆன்லைனில் தேடிய போது கிடைத்த கவிதைகளை தொகுத்து 100 பக்க கடிதமாக வழங்கியதாக கூறினார். 

இவை பெரிய குற்றமில்லை என நீதிபதி கருதியதையடுத்து ஷகில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் நீதிமன்ற விதிமுறைகளை மீறி அம்மாணவியை மீண்டும் தொந்தரவு செய்ததால் மீண்டும் ஷகில் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் பல்கலைக் கழக விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட ஷகிலை பல்கலைக் கழகத்திலிருந்தும், அவர் படித்த பட்டத்திலிருந்தும் வெளியேறுவதாக , அவர்கள் ஹாங்காங் செல்லவுள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.

பல்கலைக் கழகத்திலிருந்து ஷகில் பவ்னானி வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் , பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக பலரும் தங்களை கருத்துக்களை கூறி வருகின்றனர்.