அமெரிக்கா-ரஷ்யா மோதல் எந்த நேரத்திலும் நடக்க வாய்ப்பு - ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம்

உக்ரைன் விவகாரத்தில் இணக்கமான தீர்வு காணப்பட வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியது.

அமெரிக்கா-ரஷ்யா மோதல் எந்த நேரத்திலும் நடக்க வாய்ப்பு   - ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம்

அமெரிக்கா மற்றும் ரஷ்ய அதிபர்கள் சந்தித்து பேச உள்ளதாக வெளியான தகவலால் உக்ரைன் பிரச்சினையில் சுமுக முடிவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், சில மணி நேரங்களில் நிலைமை தலைகீழாக மாறியது. உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவுப் பகுதிகளுக்கு பொருளாதாரத் தடை என அமெரிக்கா அறிவித்தது.

பதிலடியாக அந்த பகுதிகளை தனிக் குடியரசு நகரங்களாக அங்கீகரித்து அறிவித்தார் ரஷ்ய அதிபர் புதின். அங்கு ரஷ்ய ராணுவம் அமைதி காக்கும் பணியில் ஈடுபடும் என்றும் தெரிவித்தார். இதனால் போர் நடப்பது உறுதி என்ற நிலை உருவானது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் இன்று கூடியது. 

இதில் பேசிய ஐநாவுக்கான இந்திய நிரந்தரப் பிரதிநிதி, திருமூர்த்தி, உக்ரைன் எல்லையில் பதற்றம் அதிகரிப்பது பிராந்தியத்தின் அமைதியையும் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கும் என்றார். அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் சுமுக தீர்வு விரைவில் எட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.