கொரோனாவுக்கு இந்த ஆண்டே முடிவு கட்டலாம் - உலக சுகாதார அமைப்பின் தலைவர் உறுதி

சில விரிவான வியூகங்களை பயன்படுத்தி கொரோனாவுக்கு இந்த ஆண்டே முடிவு கட்டலாம்  என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய அவர், கொரோனாவை ஒழித்து கட்டுவதில் பிராந்திய, தேசிய, சர்வதேச ரீதியாக உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்று கூறியுள்ளார்.

கொரோனாவில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, இதுபோன்ற நெருக்கடிகளை தடுக்க புதிய தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்றும், தொற்று முடியும்வரை காத்திருக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.