கொரோனாவால் மிகவும் மோசமடைந்து வரும் வடகொரியா..! 3 நாட்களில் இவ்வளவு பேர் உயிரிழப்பா?

வடகொரியாவில் கடந்த 3 நாட்களில் கொரோனாவுக்கு 42 பேர் பலியாகிய நிலையில்,  பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் மிகவும் மோசமடைந்து வரும் வடகொரியா..! 3 நாட்களில் இவ்வளவு பேர் உயிரிழப்பா?

உலக நாடுகளில் கொரோனா தொற்று குறைந்து வரும் சூழலில், சீனா, வடகொரியா உள்ளிட்ட நாடுகளில் அதன் தாக்கம் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. உருமாறி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் சீனா அரசு திணறி வருகிறது.

இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் வடகொரியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டு, நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்து 620 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று புதிதாக 15 பேர் பலியானதை அடுத்து பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்திருப்பதாகவும், 3 லட்சத்து 24 ஆயிரத்து 550 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அங்கு தடுப்பூசி இல்லாததால் நிலைமை மேலும் மோசமடையும் என கூறப்படுகிறது.