சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தியில் தொய்வு ...

சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தியில் தொய்வு ...

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளராக போற்றப்படும் சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதுமட்டுமின்றி அமெரிக்காவில் நோவாவக்ஸ்’ என்ற தடுப்பூசியை இந்தியாவில் ‘கோவோவாக்ஸ்’ என்ற பெயரில் தயாரிக்க தொடங்கியுள்ளது.

மேலும் ரஷ்யாவில் ஸ்பூட்னிக் - வி தடுப்பூசியையும் இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கான அனுமதியை மத்திய அரசிடம் சீரம் கோரி வருகிறது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளராக சீரம் நிறுவனம் கடந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பால் பாரட்டப்பட்டது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் 92 நாடுகளுக்கு சுமார் 20 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்து கொடுக்க சீரம் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ள நிலையில் 3 கோடி தடுப்பூசிகளை மட்டுமே தயாரித்து வழங்கியுள்ளதாகவும், உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது உலகளாவிய தடுப்பூசி தேவையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.