முதல் முறையாக 2 வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கியூபா சாதனை...

2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் நாடு என்ற பெருமையை கியூபா பெற்றுள்ளது.
முதல் முறையாக 2 வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கியூபா சாதனை...

 கொரோனா பரவலுக்கு பின், உலக சுகாதாரா அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உலக நாடுகள் செலுத்தி வருகின்றன. மேலும் தொடர் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட பள்ளிகளை திறக்கும் வகையில், ஒரு சில நாடுகள் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முயற்சியையும் முன்னெடுத்து வருகிறது.

இந்தநிலையில் மருத்துவத்திற்கு பெயர் போன கியூபாவில், நேற்று முதல் 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  அவர்களுக்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெறாத அப்தல்லா மற்றும் மா சோபரானா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. ஏற்கனவே அங்கு  12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் முழுவதுமாக பள்ளிகளை திறக்கவும் கியூபா அரசு திட்டமிட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com