இந்தோனேசியா நிலநடுக்கத்தில் அதிகரித்த பலி எண்ணிக்கை...தொடரும் மீட்பு பணிகள்!!!

இந்தோனேசியா நிலநடுக்கத்தில் அதிகரித்த பலி எண்ணிக்கை...தொடரும் மீட்பு பணிகள்!!!

இந்தோனேசியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என அறிவிக்கப்படிருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 268 ஆக அதிகரித்துள்ளது. 

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்:

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று இந்தோனேசியா.  தீவு நாடான இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்று.  அந்த வகையில், இந்தோனேசியாவின் ஜாவா தீவில் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதற்கட்ட தகவல் :

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வால் கட்டிடங்கள், வீடுகள்  இடிந்து விழுந்ததில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்டது.  மேலும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டது.

அதிகரித்த பலி எண்ணிக்கை:

இந்நிலையில் தற்போது நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 268 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சுமார் 1000 பேர் காயமடைந்துள்ளனர்.  மேலும் சுமார் 1000 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com