வேகமாகப் பரவி வரும் டெல்டா ப்ளஸ் வைரஸ்!

கொரோனா வைரசின் டெல்டா மாறுபாடு இலங்கையில் வேகமாகப் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

வேகமாகப் பரவி வரும் டெல்டா ப்ளஸ் வைரஸ்!

கொரோனா வைரசின் டெல்டா மாறுபாடு இலங்கையில் வேகமாகப் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் டெல்டாட் திரிபு, வேகமாகப்  பரவுவதாகவும், அதிக வீரியம் கொண்டதாகவும் உள்ளது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள இந்த திரிபு, தற்போது இலங்கையில் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக காலே, மட்டாரா போன்ற தெற்கு மாவட்டங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற வடக்கு மாவட்டங்களிலும் அதிகமாக பரவுவதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இதைப்போல கொழும்புவில் தினந்தோறும் கண்டறியப்படும் புதிய கொரோனா தொற்றுகளில் 25 முதல் 30 சதவீதம் பேர் டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் கண்டறியப்பட்டு இருக்கிறது. அங்கு தினமும் 1000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளும், சுமார் 50 மரணங்களும் நிகழ்ந்து வருகின்றன.