ட்விட்டருக்காக டெஸ்லாவின் பங்குகளை விற்றாரா மஸ்க்...?

ட்விட்டருக்காக டெஸ்லாவின் பங்குகளை விற்றாரா மஸ்க்...?

டெஸ்லாவின் முதன்மை செயல் அதிகாரியான எலோன் மஸ்க், டெஸ்லாவின் மின்சார வாகனங்கள் தயாரிப்பில் 690 கோடி மதிப்பிலான 72 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் மாதத்தில் 850 கோடி மதிப்பிலான பங்குகளை விற்ற பின்னர் இதற்கு பின்னர் டெஸ்லா பங்குகளை விற்கும் திட்டம் இல்லை என எலோன் மஸ்க் தெரிவித்திருந்தார்.

ஆகஸ்ட் 5 மற்றும் ஆகஸ்ட் 9 க்கு இடையில் மஸ்க்-ன் பங்கு மதிப்புகள் ஏற்றம் அடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. பங்குகளை விற்ற பின்னர் எலோன் மஸ்க்கிடம் தற்போது 15.5 கோடி பங்குகள் உள்ளதாக தெரிய வருகிறது.

மேலும் படிக்க:எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவாரா? தற்போதைய நிலைமை என்ன?

ஜுலை மாதத்தைக் காட்டிலும் பங்குகளின் மதிப்புகள் அதிகரித்ததால் மஸ்க் பங்குகளை விற்றதாக கூறப்படுகிறது.  டிவிட்டர் பங்குகளை வாங்குவதற்காக பங்குகள் விற்கபட்டதாக மஸ்க்-ன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.