ஜம்முவில் மீண்டும் ட்ரோன் நடமாட்டம்... பாதுகாப்புப்படை தகவல்...

ஜம்மூவின் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் இன்று மீண்டும் ஆளில்லா ட்ரோன்களின் நடமாட்டம் தென்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்முவில் மீண்டும் ட்ரோன் நடமாட்டம்... பாதுகாப்புப்படை தகவல்...
ஜம்முவின் அக்னூர் துறையில் நேற்று சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட ட்ரோன் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் ஜம்மூவில் கலுச்சக் மற்றும் கத்துவா ஆகிய பகுதிகளில் 2 ஆளில்லா ட்ரோன்களின் நடமாட்டம் தென்பட்டுள்ளது.
 
ட்ரோன்களின் நடமாட்டம் தற்போது தொடர்கதையாகியுள்ள நிலையில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பின் சோதனையில் பாதுகாப்பு படை ஈடுபட்டுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை நேற்று எல்லையில் எல்லை பாதுகாப்புப் படை பரிசோதித்துள்ளது குறிப்பிடதக்கது.