உக்ரைன் மீதான போர் எதிரொலி... ரஷ்யாவில் சேவையை நிறுத்தியது நெட்பிளிக்ஸ்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவில், பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தனது சேவையை இடைநிறுத்தியுள்ளது.

உக்ரைன் மீதான போர் எதிரொலி... ரஷ்யாவில் சேவையை நிறுத்தியது நெட்பிளிக்ஸ்!

உக்ரைன் மீது ரஷ்யா இன்று 12-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்வதால் ரஷ்யா மீது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.

இந்நிலையில், உக்ரைன் மீதான போர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷ்யாவில் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தனது சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ரஷ்யாவில் விசா, மாஸ்டர்கார்டு மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு போன்ற வங்கி பரிவர்த்தனை சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.