ஒரு கோப்பை பால் கூட ஆடம்பரம்தான் - பஞ்சத்தை ஒப்புக்கொண்ட இலங்கை

மக்களுக்கு ஒரு கோப்பை பால் கூட ஆடம்பரமாக மாறி விட்ட அளவு நாடு கடும் பஞ்சத்தில் இருப்பதை இலங்கை ஒப்புக்கொண்டுள்ளது.

ஒரு கோப்பை பால் கூட ஆடம்பரம்தான் - பஞ்சத்தை ஒப்புக்கொண்ட இலங்கை

இலங்கை பொது நிர்வாகத்துறை செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரியந்தா மயதுன்னே அளித்த பேட்டியில், கடந்த மாதத்தை விட இந்த மாதம் பொருளாதார நெருக்கடி மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாடு பஞ்சத்தை எதிர்நோக்கி மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும் அரசு ஊழியர்களுக்கு சம்பளமோ ஓய்வூதியமோ வழங்கக் கூட அரசிடம் பணம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் வழங்கப்படும் கிரெடிட் கார்டுகள் விரைவில் பயனற்றதாகிவிடும் என குறிப்பிட்ட அவர், உயிரியல் பூங்காக்களில் வாழும் விலங்குகளுக்கு உணவு வழங்கவும் அரசால் முடியவில்லை என கூறியுள்ளார்.

இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு நிபந்தனைகளுடன் வரும் சர்வதேச நிதியுதவி உள்ளிட்ட தொலைநோக்கு பொருளாதார சீர்திருத்தங்களுக்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.