கத்தாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை வீரர்கள்...காப்பாற்றுமா இந்திய அரசு?!!

கத்தாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை வீரர்கள்...காப்பாற்றுமா இந்திய அரசு?!!

தோஹாவில் உள்ள இந்திய தூதரகம், கத்தாரில் இருந்து எட்டு முன்னாள் கடற்படை அதிகாரிகளை முன்கூட்டியே விடுவித்து, நாடு திரும்புவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக வெளியுறவு அமைச்சகம்  உறுதியளித்துள்ளது.  ஆனால் இவை அனைத்திற்கும் நடுவில் மற்றொரு அதிர்ச்சியான செய்தியை குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கத்தார் சிறையில்:

கத்தாரில் 90 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களின் விடுதலை பேச்சுவார்த்தை நிலையிலேயே உள்ளது.  பலமுறை முயற்சித்தும் இந்திய அரசால் கத்தாரின் பிடியில் இருந்து அவர்களை மீட்க முடியவில்லை. 

அதிர்ச்சி தகவல்:

ஆனால் இவை அனைத்திற்கும் நடுவில் மற்றொரு அதிர்ச்சியான செய்தியை சிறையிலிருப்பவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  நீதிமன்றத்தில் விசாரணைக்கு பின், அனைத்து முன்னாள் கடற்படை வீரர்களின் காவல் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர். அதாவது, இவர்களின் விடுதலை குறித்த நம்பிக்கை மீண்டும் ஒருமுறை பொய்த்துப் போய்விட்டது என்பதையே இது குறிக்கிறது.  

காரணம் என்ன?:

இவர்கள் அனைவரும் என்ன குற்றச்சாட்டின் பேரில் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

கைதும் சிறையும்:

இந்தியக் கடற்படையின் எட்டு முன்னாள் ராணுவ வீரர்களும் ஆகஸ்ட் 30ஆம் தேதி இரவு காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.  பின்னர் அவர்கள் அனைவரும் தனித்தனிச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.  மேலும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை எனவும்  முன்கூட்டியே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியும் அவரது குடும்பத்தினர் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

யார்? யார்?:

கைது செய்யப்பட்டவர்களில் கமாண்டர் (ஓய்வு) பூர்ணேந்து திவாரி, 2019 இல் பிரவாசி பாரதி சம்மான் விருது பெற்ற இந்திய வெளிநாட்டவராவார்.  தகவல்களின்படி, பூர்ணந்து திவாரி இந்திய கடற்படையில் பல பெரிய கப்பல்களுக்கு தலைமை தாங்கியுள்ளார் எனத் தெரிகிறது.  

கைது செய்யப்பட்டவர்கள்  அனைவரும் பணி ஓய்விற்கு பிறகு கத்தாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.
ஊடக அறிக்கையின்படி, ஓய்வுக்குப் பிறகு, இந்த கடற்படையினர் அனைவரும் கத்தாரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தனர். 

முயற்சி செய்யுமா இந்தியா?:

அவர்கள் என்ன குற்றச்சாட்டின் பேரில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை எனக் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.  மேலும் அவர்களின் கைதால் நாங்கள் மிகவும் கவலையடைகிறோம் என்று கூறியுள்ளனர்.  என்ன குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை எனவும் அதற்கான பதில் எங்களிடம் இல்லை? என்றும் கூறியுள்ளனர்.  

அவர்கள் காவலில் வைக்கப்பட்டு 90 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது எனவும் அவர்களை விரைவில் விடுதலை செய்ய இந்திய அரசு முயற்சிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com