உக்ரைன் குழந்தைகளுக்காக தனது நோபல் பரிசை விற்ற பிரபல ரஷ்ய பத்திரிகையாளர்!!

உக்ரைன் குழந்தைகளுக்காக தனது நோபல் பரிசை விற்ற பிரபல ரஷ்ய பத்திரிகையாளர்!!
Published on
Updated on
1 min read

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனிய குழந்தைகளுக்கு உதவுவதற்காக பிரபல ரஷ்ய பத்திரிகையாளர் தனது நோபல் பரிசை விற்பனை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா உள்ளிட்ட உலக நாடுகள் போரை நிறுத்த வலியுறுத்திய போதும், எதற்கும் செவி மடுக்காது, உக்ரைன் மீது ரஷ்யா 2 மாதங்களை கடந்து, போர் தொடுத்து வருகிறது. இதனால் உன்ரைனின் பெரும் பகுதி அழிக்கப்பட்டு மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். குழந்தைகள் பலர் தங்கள் இருப்பிடங்களை இழந்து பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காக பிரபல ரஷ்ய பத்திரிகையாளர் டிமிட்ரி முராடோவ், தனது நோபல் பரிசு பதக்கத்தை சுமார் 10 கோடியே 35 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். 2021 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பிலிப்பைன்ஸின் மரியா ரெஸ்ஸாவுடன் இணைந்து டிமிட்ரி முராடோவ் வென்றார் என்பது குறிப்பிடதக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com