கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு.... 8 பேர் உயிரிழப்பு!!!

கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு.... 8 பேர் உயிரிழப்பு!!!

மெக்சிகோவில் இரவு நேர கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகினர்.  

மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஜகாடெகாஸ் மாகாணத்தின் ஜெரெஸ் நகரில் இரவு நேர கேளிக்கை விடுதியில் ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர்.  அவர்கள் மது, ஆடல், பாடல் என மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்.  அப்போது மர்ம நபர்கள் சிலர் கையில் துப்பாக்கியுடன் கேளிக்கை விடுதிக்குள் நுழைந்தனர்.  பின்னர் அவர்கள் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:  மசூதியில் குண்டுவெடிப்பு..... பலி எண்ணிக்கை அதிகரிப்பு....