கொரோனாவுடன் உணவுத் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் ஷாங்காய் நகரம்.. ஆத்திரத்தில் மக்கள் - என்ன செய்யப்போகிறது சீனா அரசு?

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் உணவு மற்றும் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

கொரோனாவுடன் உணவுத் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் ஷாங்காய் நகரம்.. ஆத்திரத்தில் மக்கள் - என்ன செய்யப்போகிறது சீனா அரசு?

ஷாங்காய் நகரின் இன்றைய கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டி மொத்த பாதிப்பு ஒரு லட்சத்து 70 ஆயிரத்தை கடந்துள்ளது.

அதே நேரத்தில் கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்தக் கூடத் தடை என்ற அளவில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதால் நகரின் 26 மில்லியன் மக்களும் வீடுகளுக்குள்ளும் தனித்தனித் தீவுகளாக முடங்கியுள்ளனர்.

விநியோக நிறுவனங்கள் செயல்படத் தடை என்பதால் அரசு வழங்கும் காய்கறிகளை மட்டுமே மக்கள் நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும் சில நேரங்களில் கிடைக்காமல் போகிறது.

இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வந்து கண்டன முழக்கம் எழுப்பும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. மக்களின் ஆத்திரம் எல்லை மீறிப் போகும் முன் சீன அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர் சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.