இலவசமாக வழங்கப்பட்ட துலிப் மலர்கள்.....

இலவசமாக வழங்கப்பட்ட துலிப் மலர்கள்.....

துலிப் மலர் தினத்தையொட்டி நெதர்லாந்தில் பிரமாண்ட மைதானத்தில் இலவசமாக வழங்கப்பட்ட துலிப் மலர்களை மக்கள் ஆனந்தத்துடன் அள்ளிச்சென்றனர். 

குறைந்த வெப்பநிலையில், பல்வேறு வண்ணங்களில் கண்ணைக் கவரும் வகையில் துலிப் மலர்கள் வளர்வது வழக்கம்.  இந்நிலையில் 2 லட்சம் துலிப் மலர்களை இலவசமாக வழங்கும் நிகழ்வை ஆம்ஸ்டர்டாமில் டச்சு விவசாயிகள் முன்னெடுத்தனர். 

ஒரு நபர் 20 மலர்களை எடுத்துச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், சில அரிய வண்ணவகை மலர்கள் சில நிமிடங்களிலேயே காலியாகின.  துலிப் மலர்களை பெற்ற மக்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ரஷ்யாவிற்கு எதிராக போலந்திற்கு உதவிக்கரம் நீட்டிய ஜெர்மனி.....