இலங்கையில்  மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு.. சிரமத்தில் மக்கள்!!

இலங்கையில்  மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு உச்சமடைந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இலங்கையில்  மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு.. சிரமத்தில் மக்கள்!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் பிரதமர் மாறினாலும் மக்கள் நிலையில் எந்த மாற்றமும் வரவில்லை.

உணவுப் பொருள்கள் விலை உயர்ந்துள்ளதுடன் எரிபொருள் தட்டுப்பாடு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் பெட்ரோல் டீசலுக்கு மக்கள் நாள் முழுவதும் காத்திருந்தாலும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய்க்காக மக்கள் நாள் கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை தொடர்கிறது.

இதனிடையே  முன்னுரிமை பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட எரிபொருள் விற்பனை நிலைங்களுக்கு மட்டுமே டீசல் விநியோகிக்கப்படும் என்று இலங்கை பெட்ரோலியத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது சுமார் 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் மட்டுமே கையிருப்பில் இருப்பதாகவும் இந்தியா உதவியுடன், அடுத்த டீசல் கப்பல் வரும் 16- தேதி நாட்டை வந்தடையும் வரையில் இந்த நிலை தொடரும் என்றும் கூறியுள்ளது. இதனால் எரிபொருள் இன்றி பேருந்துகள் மற்றும் லாரிகள் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட, இலங்கையில் தற்போது போக்குவரத்தும் முடங்கியுள்ளது.