ரஷ்யாவிற்கு எதிராக போலந்திற்கு உதவிக்கரம் நீட்டிய ஜெர்மனி......

ரஷ்யாவிற்கு எதிராக போலந்திற்கு உதவிக்கரம் நீட்டிய ஜெர்மனி......

Published on

நேட்டோ நட்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில், போலந்திற்கு வான்பாதுகாப்பு வாகனங்களை மொத்தமாக ஜெர்மனி அனுப்பி வைத்துள்ளது. 

நேட்டோவில் உக்ரைன் இணையவுள்ளதாக வெளியான தகவலையடுத்து, அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது.  தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நட்பு நாடுகள், உக்ரைனுக்கு உதவி வருகின்றன.  இந்நிலையில், ஏற்கனவே இருமுறை வான்பாதுகாப்பு வாகனங்களை போலந்திற்கு அனுப்பி வைத்த ஜெர்மனி, 3ம் முறையாக அந்நடவடிக்கையை தொடர்ந்துள்ளது. 

பெரும் தாக்குதல்கள் மற்றும் விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் இவ்வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனி உறுதியளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த போர்க்காலத்தில் இந்த வாகனங்கள் உக்ரைனுக்கு பேருதவியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது ஜெர்மனி.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com