
புளோரிடா மாநிலத்தில் இடாலியா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிபா் ஜோ பைடன் நேரில் பார்வையிட்டார்.
இடாலியா சூறாவளியின் போது, பலத்த மழை பெய்ததுடன் கடற்கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.
இதனால், புளோரிடா நகரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு பல இடங்களில் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளன..
மேலும் லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டன.
இந்த நிலையில், அமொிக்க அதிபர் ஜோ பைடன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறினார்.