ஆப்கானில் பாக். ஆதரவாளர்களை அதிபராக்க ஐஎஸ்ஐ தீவிரம்…

ஆப்கானில் பாக். ஆதரவாளர்களை அதிபராக்க ஐஎஸ்ஐ தீவிரம்…

ஆப்கனிஸ்தானில் தனது ஆதரவாளர்களை ஆட்சியில் அமர்த்துவதற்கான அனைத்து பணிகளையும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ முடுக்கி விட்டுள்ளது.
Published on

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தாலிபான்  பயங்கரவாதிகள் கடந்த மாதம் 15-ந் தேதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர்.இதைத் தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதையடுத்து ஆட்சி அதிகாரம் தங்கள் வசமனதாக அறிவித்த தாலிபான்கள் விரைவில் புதிய அரசு அமையும் என தெரிவித்தனர்.இந்த புதிய அரசில் தாலிபான் பயங்கரவாத அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரும் அந்த அமைப்பின் தற்போதைய தலைவருமான முல்லா அப்துல் கனி பரதருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் புதிய அரசு தொடர்பாக தாலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் ஹக்கானி வலைக்குழுவுக்கும் இடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது ஹக்கானி குழுவின் தலைவர் ஆனஸ் ஹக்கானிக்கும் தாலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.பின்னர் இந்த வாக்குவாதம் முற்றி இரு தரப்புக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் முல்லா அப்துல் கனி பரதர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இரு தரப்புக்கும் இடையிலான இந்த பிரச்சினையை சுமுகமாக பேசி தீர்த்து வைப்பதற்காக பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவர் பைஸ் ஹமீது காபூலுக்கு விரைந்தார். அவர் இரு தரப்பையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் புதிய இடைக்கால அமைச்சரவையில்  பெண்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை. தாலிபான்களின் மூத்த தலைவர்களுக்கு இடமளிக்கப் பட்டுள்ளது. இதனிடையே இதுவரை பொதுவெளிக்கு வராத தாலிபான்களின் அதிதலைவரான ஹெபதுல்லா அகுந்த்ஸதா தொடர்பாகவும் பலதகவல்கள்  வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவர்தான் தாலிபான்களின் அரசியல், படை மற்றும் மத விவகாரங்களில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர் ஆவார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com