
4,180 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் பிரெஞ்சு கயானாவில் உள்ள கொரு ஏவுதளத்தில் இருந்து ஏரியன் -5 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
இத்துடன் மலேசியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் மீசாட்-3டியும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் தங்கள் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்து விட்டன.
இந்த ஜிசாட்-24 செயற்கைக்கோள், அதிக தரம் வாய்ந்த டெலிவிஷன், தகவல் தொடர்பு, ஒளிபரப்புச்சேவையை வழங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் இந்த செயற்கைகோளால் இந்திய வாடிக்கையாளர்களின் டி.டி.எச். சேவையும் மேம்படும் எனவும் கூறியுள்ளது.
இந்த செற்கைக்கோள் பயன்பாட்டு சேவைகள் அனைத்தும் டாடா பிளே நிறுனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.