பெண் கல்வியை மறுத்தால் நீங்கள் ஒதுக்கப்படுவீர்கள்...எச்சரித்த உலக நாடுகள்!!!

பெண் கல்வியை மறுத்தால் நீங்கள் ஒதுக்கப்படுவீர்கள்...எச்சரித்த உலக நாடுகள்!!!
Published on
Updated on
1 min read

பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று ஆப்கானிஸ்தான் மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தலிபான்கள் உறுதியளித்தனர்.  ஆனால், கொடுத்த வாக்குறுதியை மீறி மீண்டும் பழைய வடிவில் வந்து சிறுமிகள் மற்றும் பெண்களின் உரிமைகளைப் பறிக்கும் வேலையைத் தொடங்கியுள்ளனர்.

மறுக்கப்படும் கல்வி:

ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்கு தடை விதித்த தலிபான்களின் சமீபத்திய முடிவுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.  ஆப்கானிஸ்தான் பெண்கள் பல்கலைக்கழக அளவிலான கல்வியைப் பெறுவதைத் தடுக்கும் செயல்பாடு மன்னிக்க முடியாதது என அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து, அவர்களின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் தலிபான் தலைமையின் இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்றும் அமெரிக்கா சார்பில் கூறப்பட்டுள்ளது.  

பாதிப் பேரை:

ஆப்கானிஸ்தானின் மக்கள்தொகையில் பாதிப் பேருக்கு கல்வியை புறக்கணித்து அவர்களை பின்தங்க வைக்கும் இந்த ஏற்றுக்கொள்ள முடியாத அணுகுமுறையின் விளைவாக, தலிபான்கள் சர்வதேச சமூகத்திலிருந்து மேலும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் விருப்பத்தின் சட்டபூர்வமான தன்மையை இழக்க நேரிடும் என்றும் அமெரிக்கா அறிவுறித்தியுள்ளது.

துணை நிற்போம்:

ஆப்கானிஸ்தானின் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு வலுவான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் எங்களது வலுவான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம் எனவும் அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கல்வி மறுப்பு ஆணை:

ஆப்கானிஸ்தானின் உயர்கல்வி அமைச்சகம் ஆப்கானிஸ்தானில் பெண் மாணவர்களுக்கு உயர்கல்விக்கு மறு அறிவிப்பு வரும் வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com