திறனற்ற ஆப்கானிஸ்தான்.... அறிவுரை வழங்கிய பாகிஸ்தான்..... காரணம் என்ன?!

திறனற்ற ஆப்கானிஸ்தான்.... அறிவுரை வழங்கிய பாகிஸ்தான்..... காரணம் என்ன?!

ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசு அதன் எல்லையில் இருந்து செயல்படும் பயங்கரவாத குழுக்களை சமாளிக்க "விருப்பத்தையும் திறனையும்" வெளிப்படுத்தவில்லை என்றால், பாகிஸ்தானில் இருந்து அவர்களி வெளியேற்ற அதிக நேரம் எடுக்காது.

உலக நாடுகளிடம் கோரிக்கை:

சமூகத்தின் ஒப்புதலுடன், தங்கள் எல்லைக்குள் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் பிலாவல் பூட்டோ.   இடைக்கால ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு நிலையான இராணுவத்தை உருவாக்குவதற்கான வழியைக் கண்டறிய உலகத் தலைவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார் பிலாவல்.  மேலும் அவர்களது நாட்டின் எல்லைக்குள் இருக்கும் தீவிரவாதத்தை சமாளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். 

திறனற்ற ஆப்கானிஸ்தான்:

ஜெர்மனியில் நடைபெற்று வரும் முனிச் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பாகிஸ்தானின் வெளியுறவு துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ பயங்கரவாதத்திற்கு எதிராக பேசியுள்ளார்.  ஆப்கானிஸ்தானைக் குறித்து பேசிய பிலாவல், பயங்கரவாதத்தை எதிர்க்கும் படையோ, சரியான எல்லைப் பாதுகாப்போ கூட இல்லை எனும் போது பயங்கரவாத அச்சுறுத்தலை சமாளிக்கும் திறன் எப்படி இருக்கும் என கேள்வியெழுப்பியுள்ளார்.  இவ்வாறு இருப்பது அண்டை நாடுகளுக்கும் பின்னர் சர்வதேச சமூகத்திற்கும் அச்சுறுத்தலாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதிகரித்துள்ள தீவிரவாதம்:

மேலும் காபூலில் அமெரிக்க ராணுவம் வெளியேறிய பிறகு, பயங்கரவாத நடவடிக்கைகள் மேலும் அதிகரித்துள்ளன எனக் கூறிய அவர் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் விரும்பவில்லை எனவும் இத்தகைய சவால்களை எதிர்கொள்ள ஆப்கானிய அதிகாரிகளை சமாதானப்படுத்த அதிக காலம் தேவைப்படுகிறது எனக் கூறியுள்ளார்.  தொடர்ந்து பேசிய பிலாவல் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து, அவர்களைப் பின்தொடர்ந்து, கடந்த கால தவறுகளை மீண்டும் செய்ய விரும்பவில்லை எனவும் எனவே ஆப்கானிஸ்தானில் தொடர்புடைய சட்ட அமலாக்க அமைப்புகள் செயல்படுவதே சிறந்த சூழலை ஏற்படுத்தும் எனவும் வெளியுறவுதுறை அமைச்சர் கூறியுள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com